2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சக மாணவனை தாக்கிய அறுவர் கைது

Simrith   / 2025 மே 07 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் ஏப்ரல் 29 ஆம் திகதியன்று தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறி ஹோமகம பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

 மாணவர்கள் ஹோமகம பொலிஸ் நிலையத்தில்  மே 6, செவ்வாய்க்கிழமை முன்னிலையாகியதை அடுத்து, அங்கு அவர்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலங்குட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X