2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

சகோதரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனோர் சந்தியில் போக்குவரத்து பொலிஸ்  அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 19ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

துலக்ஷி சமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது 16 வயதுடைய சகோதரி நிமாஷா நவன்ஜலி பெர்ணான்டோ ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X