Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரைப்பட நடிகர் சஞ்சய் தத், எந்தக் காரணங்களின் அடிப்படையில், தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து யாரால் விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன் இவ்வாறு கேட்டதாக அவருக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா. இராஜீவ் காந்தி, இதை உறுதிப்படுத்தினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் பேரறிவாளன் கோரியுள்ளார்.
சஞ்சய் தத் விடுதலை தொடர்பான கோப்பின் முழு நகல் மற்றும் சிறையில் அவரது நடவடிக்கை குறித்த தகவல்களைத் தருமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். மும்பையில் 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சஞ்சய் தத் தொடர்புபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனை முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், சஞ்சய் தத், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று, 'நன்னடத்தை' காரணத்துக்காக விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
அவருக்கான தண்டனைக் காலத்தை குறைக்கும் முடிவை சிறைக் கண்காணிப்பாளரே எடுத்தார் என்று மராட்டிய அரசு கூறியதாக செய்திகள் தெரிவித்திருந்தன.
22 minute ago
26 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
38 minute ago
2 hours ago