2025 ஜூலை 05, சனிக்கிழமை

சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல – மஹதென்ன பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், சிறுமியின் சடலத்தை நாளை மறுதினம் (09) தோண்​டி எடுக்கும்படி, பதுளை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, இதில் குறித்த சிறுமியின் தாய் மற்றும் பிறிதொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல – கந்தேகெதர – மஹதென்ன பிரதேசத்தில் குறித்த இருவரும் வசித்து வந்த நிலையில், அவர்களது வீட்டுக்கு அருகாமையில் குறித்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதெனப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த தகவலையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .