2025 ஜூலை 05, சனிக்கிழமை

சட்டக்கல்வியை பாடப்புத்தகங்களில் உள்ளடக்க அமைச்சரவை அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டக்கல்வியை பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சட்டம் தொடர்பான அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளமையானது தற்போதைய  அரசாங்கத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியென நீதியமைச்சர் தலதா ​அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு தொடர்பான அடிப்படை சட்டத்திட்டங்கள் குறித்து சிறிய வயதிலேயே அறிந்துக்கொள்வதன் மூலம் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க  இச்சட்டக்கல்வி கைகொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டக்கல்வியைப் பாடப்புத்தகங்களில் உள்ளடக்குவது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் முன்னெடுக்கப்படுமென்றும் நீதியமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .