2025 மே 16, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி: 12 பேர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 18 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இரவு ​வேளையில் சுழியோடியமை மற்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த 12 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 03 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .