2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவ முயற்சித்த இருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், உருமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் நேற்று (28) இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கடற்பரப்பில் சஞ்சரித்த படகொன்றை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த படகு இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

படகில் இருந்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த இருவரும் இலங்கையில் இருந்து 2008ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச்சென்றவர்கள் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைதுசெய்ப்பட்ட இலங்கை பிரஜைகளான சந்தேக நபர்கள் இருவரும், மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .