Janu / 2026 ஜனவரி 04 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு மேலாளர் ஞாயிற்றுக்கிழமை (04) அன்று கைது செய்யப்பட்டதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தெரிவித்துள்ளது.
அம்பன்பொலவைச் சேர்ந்த 46 வயதான குறித்த நபர் உனவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் மறைந்திருந்த நிலையில் வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா சதோச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியொன்றை, முன்னாள் வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் எத்தனோல் நிறுவனத்திற்கு 2013 ஆம் ஆண்டு முதல், எத்தனோல் கொண்டு செல்வதற்காக சந்தேக நபரின் தலையீட்டால் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 2016 முதல் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சரின் மூத்த மகனும் செயலாளரும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கடந்த சில நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் தனது கையடக்க தொலைபேசி எண்களை மாற்றி விசாரணை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை உனவட்டுன பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்றில் முறைகேடான உறவை வைத்திருந்த பெண்ணுடன் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago