Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 22 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (21) கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர,
தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்ற சத்தியகடதாசியை பெற்று நிபந்தனைகளின் அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சட்டமாதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) விமல் வீரவன்ச எம்.பி எழுப்பிய சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபையில் ஒழுங்கிப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய விமல்,
வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தேர்தல் இழுபறியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த பிரச்சினைக்கு அமைச்சரவை மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் நிதி விடுவிக்காமல் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரசசேவையாளர்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அமைச்சரவை ஊடாக நிவாரண கொடுப்பனவு வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி .எம் .பி.ரஞ்சித் மத்தும பண்டார, ஒட்டுமொத்த வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளமும் இல்லை,சேவையும் இல்லை ஆகவே மார்ச் மாதம் 9 ஆம் திகதி என்ற வரையறைக்குள் அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி , 1987 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு 1992 ஆம் ஆண்டு வரை குறித்த தேர்தல் இடம்பெறவில்லை.அதுவரையான காலப்பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது,ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது பிரச்சினைக்குரியதல்ல என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
49 minute ago
2 hours ago