2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சத்திரசிகிச்சைக் கழிவுகளால் அலுவலக பணியாளர்களுக்கு டெங்கு

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து அகற்றப்படும் சத்திரசிகிச்சைக் கழிவுகள் குறித்த வைத்தியசாலையின் பின்புறமாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளமையால், நோயாளர்களும் வைத்தியசாலை அலுவலகர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பதில் தலைவர் எஸ்.பீ.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

 

குறித்த கழிவுகளை அகற்றும் நிறுவனம் அவற்றை உரிய முறையில் அகற்றாமைக் காரணமாக, இவ்வாறு தேங்கி கிடப்பதாகவும், இதனால் அலுவலக பணியாளர்கள் சிலர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்குவதற்காக குறித்த கழிவுகளை அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வருவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .