2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சந்திரிகா மீது தற்கொலைத்தாக்குதல்: இருவருக்கு 590 வருடங்கள் சிறை

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், குற்றவாளிகளாக இனங்கண்ட, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க அவ்விருவதுக்கும் 590 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

ஒருவருக்கு 300 வருடங்களும் மற்றொருவருக்கு 290 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார்.

இந்த மூவருக்கு எதிராக 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று புதன்கிழமை(30) வழங்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதன் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோரே இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் பலியானதுடன் 180 பேர் காயமடைந்தமை குறிப்பிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X