2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் கீரி சம்பா அரிசிக்குப் பற்றாக்குறை இருப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள், கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் வழங்குவதால், அதை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சில்லறை விற்பனையாளர்களும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனிடையே, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .