2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஜூலை 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர்  எஸ்.எம். சந்திரசேனவின் விளக்கமறியலை ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு பிரதான நீதிவான்தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்காக கொள்முதல் செய்யப்பட்ட ரூ.25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல்லை தனது அரசியல் கூட்டாளிகளுக்கு 2015 தேர்தலுக்கு சற்று முன்னதாக, விநியோகிக்க 2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்ட செயலக அதிகாரிகளை சந்திரசேன வலியுறுத்தியதாக விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதனையடுத்தே முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X