2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற குடிநீர் போத்தல்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவிதமான தரப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாத குடிநீர் போத்தல்கள் சந்தைப்படுத்தப்படுவதாக அகில இலங்கை தரநிர்ணய குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேடமாக இனங்காணப்படாத சிறுநீரக நோய் காணப்படும் இடங்களில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பெற்றுகொள்ளப்படும் நீரையே இவ்வாறு போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குடிநீர் போத்தல்கள் குருநாகல், அநுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் விற்ப​னை செய்யப்படுவதாக குறித்த சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .