Editorial / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (13) முதல் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்..
பொத்துவில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாப்புச்சட்டம் அமலாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதேவேளை, சிங்கள பாடசாலையிலிருந்து, பொத்துவில் பிரதேச செயலகம் வரையும்,பிரதான வீதியிலிருந்து அல் நஜாத் பள்ளிவாசல் வரையும், பிரதான வீதியிலிருந்து சட்டாம் பியர் சந்தி வரையும், பிரதான வீதியிலிருந்து முர்சானா சந்தி வரையும்,பொத்துவில் சுற்று வட்டத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையும் மருந்தகங்கள், பழக்கடைகள், உணவகங்கள் பிற்பகல் பகல் 01.00 மணிக்கு பிறகு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.
சாப்புச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
23 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
44 minute ago