Editorial / 2026 மே 01 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், வியாழக்கிழமை (30) அன்று பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை அறுகம்பை பிரதேசத்திற்கு வருகை தந்த குறித்த இளைஞர்கள், அங்கு முன்னர் செயற்பட்டு வந்த 'சபாத் இல்லம்' தொடர்பாகத் தேடி விசாரித்துள்ளனர். இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொத்துவில் பொலிஸார் அவர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இவர்கள் எதற்காக அந்த இடம் குறித்து விசாரித்தார்கள் என்பது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago