Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இன்றைய தினம் (11) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் இத் தலைமைகள் பொதுவாகவே எமது மக்களின் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்துவரும் நிலையில், சம்பூர் மின் உற்பத்தி நிலைய விவகாரமானது தற்போது பெரும் மக்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அது அப்பகுதியின் சூழலுக்கு பெரும் ஆபத்தாக இருக்குமென பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரம் இத்திட்டம் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகளே காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களின் நலன்களை அவதானத்தில் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அந்த வகையில் இந்திய அரசசாங்கத்துடன் கலந்துரையாடி இத்திட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.
எமது மக்களின் நலன்கள் தொடர்பில் பாரிய அக்கறையுடன் செயற்பட்டுவரும் இந்திய அரசாங்கம், இந்த விடயத்திலும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய முன்வரலாம்.
எனவே, இதற்கு இன்றைய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் தயாரா? இல்லையேல், இந்தப் பிரச்சினையையும் எமது மக்களின் ஏனைய பிரச்சினைகள் போல் கைகழுவி விடப் போகிறார்களா?
எமது மக்களின் வாக்குகள் மட்டும்தான் தமக்குத் தேவை. எமது மக்களின் பிரச்சினைகள் தமக்குத் தேவையில்லை என்று கருதி செயற்பட்டுவரும் இத் தலைமைகள், இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .