S.Renuka / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணத்தை முறைகேடு வழக்கில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க பெயரிடப்பட்டிருந்தார்.
கடந்த விசாரணையின் போது, அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவரை இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago