2025 மே 15, வியாழக்கிழமை

சாமிமலை சமையல்காரர் கொலை

Janu   / 2025 மே 15 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை, அத்திடிய பேக்கரி சந்தியில் உள்ள ஒரு ஹோட்டலொன்றில் பணிபுரிந்த  சமையல்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா- சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அந்தோணி சாமி ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேக்கரி சந்திக்கு அருகில் உள்ள  தங்குமிட அறைக்கு முன்பாக ஒருவர் காயமடைந்து கிடப்பதாக 119 பொலிஸ் அவசர எண்ணுக்கு கிடைத்த தகவலுக்கமைய கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்று   குறித்த நபரை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்  உயிரிழந்துள்ளார்.    

இறந்தவரின் முகம் மற்றும் கால்களில் காயங்கள் காணப்பட்டதாகவும், அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருடன் ஹோட்டலில் பணிபுரியும், ஹோட்டலுக்கு அருகில் உள்ள அறையில் தங்கியுள்ள நால்வருக்கு இந்த கொலையுடன் தொடர்பு இருக்கலாமென  சந்தேகிக்கும் பொலிஸார்  இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .