2025 ஜூலை 16, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ்கீர்த்தி ரத்ன 

மாத்தளை புஸ்ஸெல்ல கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது, இன்று (17) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இறத்தொட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புஸ்ஸெல்ல பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தரான ஏ.ஜீ.குணரத்ன என்பவர் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்ட முறுகல் நிலையே, தாக்குதலுக்குக் காரணம் என்றும் இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X