J.A. George / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையல் எரிவாயு விலை இன்று(27) பிற்பகலில் அதிகரிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில், நாடு முழுவதும் உள்ள லிட்ரோ சமையல் எரிவாயு முகவர்கள் எரிவாயு சிலிண்டர்களை சேகரித்து வைப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாணந்துறையில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் இன்று காலை முதலே தங்கள் களஞ்சிய சாலைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளதாகவும், எனினும், பல எரிவாயு விற்பனை நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள் காரணமாக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் நுகர்வோர் நீண்டி வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-லங்காதீப
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026