2026 மே 06, புதன்கிழமை

’சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி விநியோகிக்கவும்’

Niroshini   / 2021 மே 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோகிராம் எரிவாயு (Gas) சிலிண்டர் விநியோகத்தைத் தொடந்து நிறுத்தாமல் முன்னெடுக்குமாறு, உரிய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ள கூட்டுறவுச் சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, அவ்வாறு Gas விநியோகத்தில் தடையை ஏற்படுத்தினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதால், விநியோக நிறுவனங்களில் தலைவர்களை அழைத்து பெச்சுவார்த்தை நடத்தியுள்ள இராஜாங்க அமைச்சர், மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்களை மறைத்துவிட்டு, அண்மையில் அறிமுகப்படுத்திய 18 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளிலேயே அந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாகவும், இனிவரும் நாள்களில், 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் விநியோகிக்குமாறும், அழகியவன்ன அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சந்தையில் காணப்படும் எரிவாயு சிலிண்டர்களின் கொள்ளளவு தொடர்பான சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .