Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 22 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகள் தேவையில்லை. அத்துடன், இந்த விசாரணைக்காக நிபுணர்களை வரவழைக்க வேண்டிய அவசியமும் இல்லை என கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றே போதுமானது' எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பீ.பீ.சி ஊடக சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாணையில் சர்வதேசம் தலையிடுவதற்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன். உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு, அதற்கானத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வல்லமை படைத்த நிபுணர்கள், விசேடத்துவம் வாய்ந்தவர்கள் எங்கள் நாட்டில் ஏராளம் உள்ளனர்.
உள்நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டில் உள்ளவர்களே தீர்த்துக்கொள்வோம். இது தொடர்பில் சர்வதேசம் குழப்பமடையத் தேவையில்லை' என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .