Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (06) முற்பகல் நடைபெற்றது.
புத்தர் பெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பொலொன்னறுவை சோமாவதி விகாரையை வழிபட வரும் மற்றும் கல்வி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக, வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாராதிபதி மஹாவிஹார வன்சிக சியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து தரப்பின் பதிவாளர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக தேரரின் ஆலோசனையின் படி ரத்ன சமூஹ நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய மித்ரபால லங்கேஸ்வரவின் முழுமையான நிதியுதவியுடன், தொல்பொருள் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
அதன் பின்னர் பெயர் பலகையை திறந்து வைத்து, தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய புதிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் தந்ததாதுவுக்கு மலர் வைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ரத்ன சமூஹ நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய மித்ரபால லங்கேஸ்வர இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மகத்தான தொல்பொருள் மதிப்புமிக்க சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கான வாயிலாக இந்தப் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அமையும் என்று குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த முறையான அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையை உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் இதனூடாக நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
19 minute ago
24 minute ago
30 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
30 minute ago
33 minute ago