2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சர்ச்சை கட்டடம்: செப்.8 ஒழுக்காற்று விசாரணை

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய  கட்டடம் தொடர்பாக, எதிர்வரும் 8ஆம் திகதி சௌமியபவானில் இடம்பெற உள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு  கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பத்தனை தொடர் கடைத் தொகுதி  தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரிடம்  முறையிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொட்டகலை பிரதேச தலைவர் ராஜமணி பிரசாந்திடம் பணிப்புரை விடுக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராந்த போது, சர்ச்சைக்குரிய இக்கட்டடமானது அரச அனுமதி எதுவும் இன்றி முறைகேடாக கட்டப்பட்டதாக தெரியவந்தையடுத்தே, அவர்கள் இருவரும் ஒழுக்காற்று விசாரணைக்கு  அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய  இக்கட்டடத்தை மாவட்ட செயலாளர் ஊடாக  அரச உடைமை ஆக்குமாறு இ.தொ.கா பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், பணிப்புரை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .