2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘சர்வதேச நீதிமன்றத்தில் அமுனுபுரவை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேர்ணல் அமுனுபுரவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

மாலியில் உள்ள ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வரும், லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுர மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளுமின்றி அவரை நாட்டுக்கு திருப்பியனுப்பும் ஐ.நாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் மூலம் அவரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் - நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் இந்த முடிவு பாரதூரமானது. தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது  கேர்ணல் அமுனுபுர இராணுவத்தின் 58 ஆவது படையணியை வழிநடத்தியிருந்தார்.

இந்தப் படையணியின் மீது வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், சரணடைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களை சித்தரவதை செய்து படுகொலை செய்ததாகவும், சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா சபை இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே கேர்ணல் அமுனுபுரவை திருப்பியழைக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இது இலங்கை இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய அழுத்தம்”  எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .