2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுமி வன்புணர்வு: 2 பிள்ளைகளின் தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை

Editorial   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு இருபதாயிரம் ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தவும், தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவும், தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சுதத் ரோஹண என்ற நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. கடுவலை, வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .