2024 மே 04, சனிக்கிழமை

’சூலாவுடன் என்ன தொடர்பு’

Freelancer   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும்   இடையிலான தொடர்பு என்ன?
களனி கம பகுதியில்   வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்?  என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான  காவிந்த ஜயவர்தன  கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின . குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான  விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ. பிரிவு பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது.பயங்கரவாதி சஹ்ரானுடன் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கு  பலமுறை தொடர்புக் கொண்டுள்ளார்.ஆகவே சஹ்ரானுக்கும்,இவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்றும் வினவினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .