Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
S.Renuka / 2025 மே 18 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார அமைப்பின் (WHO) 78ஆவது வருடாந்திர உலக சுகாதார மாநாட்டில் (WHA78) பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சுவிட்ஸர்லாந்துக்குப் புறப்பட்டுள்ளார்.
இந்த மாநாடு மே19 முதல் 27 வரை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் ‘ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்’ என்ற தலைப்பில் நடைபெறும்.
அனைத்து உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளிலிருந்தும் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாடு நடைபெறும் போது, திட்டங்கள், கருத்துகள் மற்றும் ஆராய்ச்சித் தரவுகள் முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டிய விரிவான விவாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகளின் முடிவுகள் வரும் ஆண்டிற்கான உலகளாவிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸயைத் தவிர, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago