2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சவுதி அரேபிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது தில்லி மற்றும் கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்Captain (Navy) Hussain Othman Al Kowaileet,பாதுகாப்பு செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) வௌ்ளிக்கிழமை ( 26) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வருகை தந்த சவுதி அரேபிய பாதுகாப்பு ஆலோசகரை, பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றதுடன், அவருடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நல்லுறவையம் நினைவு கூர்ந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X