2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் திங்கட்கிழமை (15)அன்று இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

முதலில் பேசிய ஜிலித் நிஷாந்த (ஐ.தே.க.), இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதல்ல என்று கூறினார். இந்த வரவு- செலவுத் திட்டம் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்றது என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய, பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவப்பு பலூன்களை வெடித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .