2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின்  விளக்கமறியல்  கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை (19) பிறப்பிக்கப்பட்டது.   

2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை சொத்துக்களுக்கு இழப்பீடு பெற அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

வழக்கை விசாரிக்கும் நிரந்தர பிரதான நீதவான் விடுமுறையில் இருந்ததால் மேலதிக நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவு அன்றைய தினம் பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X