Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
திங்கட்கிழமை (30) மாலை உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்தர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, வீதியில் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago