2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிகை அலங்கார நிலையங்களை மூடுமாறு அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு- பண்டாரநாயக்க பகுதியில் உள்ளவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் ஒருவர் ஊடாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய  உணவகங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத காரணத்தால், மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேணுவதுடன் சுகாதார வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X