Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை, சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் இடர்களை கருத்திற் கொண்டு அதனை ஆராய்ந்து, நிறுவனங்கள் பலவற்றின் பரிந்துரைக்கமைய, சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago