2024 மே 18, சனிக்கிழமை

’சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்’

Freelancer   / 2024 மே 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த மே தின கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதி தலைவர் எம். உதயகுமார், முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க உள்ளிட்ட பலர்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ , மலையக சமூகத்தின் மொழி உரிமையை பாதுகாத்து, நிலம் மற்றும் வீட்டு உரிமையை வழங்குவதாக உறுதியளித்தார்.

தோட்டத்தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவதாகவும் அவர்கள் கௌரவமாக நாட்டில் வாழும் உரிமையை வழங்குவேன் என்றும் சஜித் பிரேமதாஸ வாக்குறுதி வழங்கினார்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .