2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம் சாரதி கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை கடற்கரைப்பகுதியில், தனது காதலனுடன் குறித்த சிறுமி இருந்தபோது, தான் பொலிஸ் அதிகாரியெனக் கூறி, சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் காதலன், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, தென்பகுதி அரசியல்வாதி  ஒருவரின் சாரதியை, மாத்தறை பொலிஸார்  இன்று (23), கைது  செய்துள்ளனர்.

கைது  செய்யப்பட்ட  சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .