Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூன் 02 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவரை படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தப்பியோடிய சிறைச்சாலை கைதி ஒருவர் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார், பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இவர், தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்ட்டு மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், தப்பிச்சென்றுவிட்டார்.
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
புகைப்படத்தில் காணப்படும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718591364 அல்லது 0718591370 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago