2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறைக்குள் பதற்றமான நிலையை தோற்றுவித்த 8 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பதற்றத்துக்கு காரணமான 8 கைதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனரென, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 8 பேரும், போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களெனவும், இதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டிலிருந்து இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அலைபேசிகள் பல மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொலை, பாதாள குழு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கீதனகே அமரசிறி எனப்படும் நபரும் இந்த பதற்றமான சூழ்நிலைக்கு காரணமானவரென தெரிவித்துள்ள சிறைச்சாலை வட்டாரங்கள் குறித்த 8 பேரில் உள்ளடங்கும் பெண் கைதி ஒருவர்  கிரிவெஹர கொபவெக தம்மிந்த தேரர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .