2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துர மதுஷுடன் இணைந்து ​போதைப்பொருள் வர்த்தகமோ அல்லது வேறு ஏதாவது குற்றச்செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாக்கந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என பலர் ​தொடர்பு வைத்துள்ளமைக் குறித்து தகவல்கள் வெளிவரும் நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் இந்த விடயங்களுடன் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மதுஷ் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த விரிவான உத்தியோகப்பூர்வ அறிக்கை இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .