2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

சிலாபம் பஸ் விபத்தில் 21 பேர் படுகாயம்

Editorial   / 2025 ஜூலை 04 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், தெதுரு ஓயா அருகே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி ஒரு பெரிய மரத்தில் மோதியதில், ஓட்டுநர் உட்பட 21 பேர் காயமடைந்து, சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே, வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்து, திடீரென பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து தெதுரு ஓயாவிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களின் மிகுந்த முயற்சிக்குப் பின்னர் காயமடைந்தவர்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .