2024 மே 02, வியாழக்கிழமை

சில் துணி விவகாரம்: மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுவினை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சில் துணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள  3 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.

குறித்த மனு நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வெங்கப்புலி முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கு தொடர்பான விளக்க அறிக்கையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் இரண்டு தரப்பினருக்கும் நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

2015ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாய் நிதியில் சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவத்தில் இருவரும் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .