2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிவனொளிபாத மலையின் பருவகாலம் டிசெ. 22இல் ஆரம்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனொளிபாத மலையின் பருவகாலம், டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி, வெசாக் தினத்துடன் நிறைவடையவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவகாலத்தில் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில் சுற்றாடலை மாசுபடுத்தாது நடந்துகொள்வது அவசியம் என்று, நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல், நல்லதண்ணி நகரின் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கேட்போர்கூடத்தில், நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், பொதுச் சுகாதார அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸார், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பச் சபையின் அதிகாரிகள், மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வழமைபோன்று இம்முறையும், சிவனொளிபாத மலை வளாகத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதெனவும், எனவே, சுற்றுச்சூழலின் பாதுகாப்புத் தொடர்பில், யாத்திரிகர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .