Freelancer / 2022 நவம்பர் 02 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சீஎல்எப்க்கு ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் அவரது பாரியார் வருகை தந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்தனர்.
சீஎல்எப்இல் உள்ள மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடைய உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்றுவரை இ.தொ.காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பாகவும், இ.தொ.கா செய்து வரும் சேவைகள் குறித்தும் இதன் போது ஜப்பான் தூதுவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்,தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கணகராஜ், மூத்த அரசியல்வாதி மதியுகராஜா, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் மரயா சக்தி மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago