2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சீகிரியாவில் சூரியோதயத்தை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச

உலக சுற்றுலா தினத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணியிலிருந்து, சீகிரியா குன்றை பார்வையிடும் வாய்ப்பு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கமைய, இன்று அதிகாலை 5 மணிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றில் ஏறி சூரியோதயத்தை காணும் வாய்ப்பைப் பெற்றனர்.

இதவேளை, வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையே சீகிரியாக் குன்றை பார்வையிடும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனவே இன்றுப் போலவே தொடர்ந்து வரும் நாட்களிலும் அதிகாலை 5 மணியிலிருந்து இதனைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்குமாறு மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X