2025 ஜூலை 16, புதன்கிழமை

சீன விமானம் மத்தலைக்கு திரும்பியது

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் நேற்று (04), இரவு பெய்த அடைமழையின் காரணமாக, விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த சீன விமானமொன்று, மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பட்டுள்ளது.

சீனா விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம், சேங்டூவிலிருந்து வருகைத்தந்திருந்ததுடன், இதில் 166 பயணிகளும், சேவையாளர்கள்  13 பேரும் இருந்துள்ளனர்.

நேற்று இரவு (04), 9.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக, இரவு 10.30 மணியளவில் மத்தலை விமான நிலையத்தில், குறித்த விமானம் தரையிறக்கபட்டுள்ளது.

எனினும், குறித்த விமானத்தில் வருகைத்தந்த பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறங்காதிருந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை (05), 12.30 மணியளவில் குறித்த விமானத்தின் மூலம் அவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .