Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
சீனாவுடனான தற்போதைய கலந்துரையாடல்கள் மிகவும் சாதகமான திசையில் நகர்வதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா, இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லப்படுமே தவிர அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் இக்கலந்துரையாடல்களில் எவ்வித இரகசியங்களும் இல்லை என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தில் சீனா மிகவும் பொறுப்புடனான முக்கிய பங்கை வகிப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் பொதுவான யோசனைகளுடன் சீனா தொடர்புபடுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
இதற்கமைய கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் இதற்கான சிறந்த அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான பிரதான குழு ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சில புதிய கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் தற்போதைய பாரிய பிரச்சினையாக காணப்படும் அந்நிய செலாவணிக்கு தீர்வாக, ஐ.எம்.எப் உடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமின்றி எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் பலவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
“சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தினாலும் உடனடியாக கடன் கிடைக்காது. இது ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும். இலங்கைக்கு பெருந்தொகை கடன் வழங்குனரான சீனாவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான முன்மொழிவுகளுக்கு நிபந்தனைகளுக்கு இணங்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அவ்வாறு இணங்காவிட்டாலும் அதற்கான மாற்று வழிகள் உள்ளன. ஆனால் எந்தவொரு இடத்திலும் இரகசியத் தன்மையும் இல்லை“ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
17 minute ago
21 minute ago