2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார அமைச்சின் 3 நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் கீழான 3 நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனார்தனவால் 3 புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எம்.ரூமி  அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின்  பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நிறுவனத்தின்  முகாமைத்துவ பணிப்பாளராக மஹரகம வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் வில்பிரட் குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேசிய ​ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்துதல் அதிகாரசபையின் தலைவராக ஹசித த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவராக வைத்தியர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சின் வேலைத்திட்டங்கள் மேற்பார்வ பிரிவின் பணிப்பாளர் நாயகமாக குமார த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .