2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சுதந்திர தின விழாவில் மயங்கிய மாணவர்கள்

Freelancer   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 4 பேர் திடீரென மயங்கியுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழா வவுனியா மாவட்டத்தில் நேற்றுக் காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் மயங்கி வீழ்ந்துள்ளனர்.

அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணி வகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேரமாக மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மயங்கி விழுந்துள்ளனர். (a)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X