2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘சுயநலமாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’

ஆர்.மகேஸ்வரி   / 2020 மார்ச் 16 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தும், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறித்து தெரிந்திருந்தும், அதன் பாதிப்புகள் தொடர்பில் இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பி​ரேமதாஸ, சுயநலமாகவே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலைத்தார் என்றார்.

“மக்களின் உயிர் மீது அக்கறையின்றி, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு​ பொருட்டல்ல” என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .